பட்டதாரிகளுக்கு மத்திய பட்டு வாரியத்தில் பணி: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பட்டதாரிகளுக்கு மத்திய பட்டு வாரியத்தில் பணி: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

computer-job-largeபெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய பட்டு வாரியத்தில் (Central Silk Board) காலியாக உள்ள 60 கிளார்க் மற்றும் கள உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineer – 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Translator – 01
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் அல்லது இளநிலை பட்டப்படிப்பில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக முடித்திருக்க வேண்டும். மேலும் ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் வகையில் சான்றிதழ், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மொழி பெயர்ப்பாளர் பணியில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Superintendent (Admin) – 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Reeling & Spinning) – 01
தகுதி: Textile Technology, Handloom Technology பிரிவில் டிப்ளமோ முடித்து கணினி குறித்த திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Library & Information Assistant – 01
தகுதி: Library Science/ Library and Information Science பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம்.
சம்பளம்: அனைத்து பணிகளுக்கும் ரூ.9,300 – 34,800.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stenographer (Grade II) – 03
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 10 நிமிடங்களுக்குள் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் எழுதியதை கம்ப்யூட்டரில் 50 நிமிடத்திற்குள் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Upper Division Clerk – 36
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கித்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Field Assistant – 23
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியலை ஒரு பாடமாகக் கொண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Serculture பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cook – 01
வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கேட்டரிங் பாடத்தில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200.

விண்ணப்பிக்கும் முறை: www.csb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Member-Secretary,
Central Silk Board,
Ministry of Textiles,
Govt Of India,
Hosur Road, B.T.M Layout,
Madiwala,
Bangalore- 560 068.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2016.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.12.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.csb.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply