முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சர்ஜரி. 24 மணி நேரம் கழித்து முன்னேற்ற நிலவரம் தெரிய வரும்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சர்ஜரி. 24 மணி நேரம் கழித்து முன்னேற்ற நிலவரம் தெரிய வரும்

jayalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை கத்தியின்றி செய்யப்படும் நவீன சிகிச்சை. இதய நாளத்தில் உள்ள அடைப்பை நவீன முறையில் சரிசெய்வதுதான் ஆஞ்சியோ சிகிச்சை என்று கூறப்படுகிறது.

முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 24 மணி நேரம் கழித்தே முதல்வர் உடல்நிலையில் என்ன முன்னேற்றம் உள்ளது என்பதை கண்டறிந்து அடுத்தகட்ட சிகிச்சை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply