முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம். அப்பல்லோ மருத்துவமனையில் அதிர்ச்சி அறிக்கை
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து கொண்டிருப்பினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவே அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் இதுவரை கூறி வந்தன.
ஆனால் தற்போது வெளியிட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கையில் முதல்வர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் பெருந்துயரத்தில் உள்ளனர்.
சற்று முன் வெளியிட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நேற்று மாலை மாரடைப்பால் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவிக்கு மாற்றப்பட்டார். அதன் பின் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் முதல்வர் உள்ளார். இருப்பினும் முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான வகையில் உள்ளது.” என கூறப்பட்டுள்ளது.
முதல்வர் மீண்டும் உடல்நிலை தேறி வரவேண்டும் என கோடிக்கணக்கான தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த பிரார்த்தனையின் சக்தியால் முதல்வர் மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது