முதல்வருக்கு சிகிச்சை தொடர்கிறது. அப்பல்லோ அதிகாரபூர்வ தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாக கடந்த சில நிமிடங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அப்பல்லோ நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் முதல்வருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை காப்பாற்ற அப்பல்லோ மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும் அனைத்து முயற்சிகளும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது. அழுது கதறிய அதிமுக தொண்டர்கள் ‘அம்மா வாழ்க’ என்று உற்சாகத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.