தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தை அடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்.
இன்று நடந்த சட்டப்பேரவை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தலைவராக பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்ப்ட்டார்.
இதையடுத்து கிண்டி ராஜ்பவனில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் முன்பு பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். கவர்னர் இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வத்தை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன் உள்பட 14 அமைச்சர்களும் பதவியேற்றனர்.