ஜெயலலிதா மறைவு: கருணாநிதி, ஸ்டாலின் இரங்கல்

ஜெயலலிதா மறைவு: கருணாநிதி, ஸ்டாலின் இரங்கல்

jaya-karuna-stalinதமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு பின்னர் திரையுலகில் இருந்து வந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் போலவே முதல்வராக இருந்தபோதே மரணம் அடைந்த பெருமையும் ஜெயலலிதாவுக்கு உண்டு. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி: “கட்சிகளைப் பொறுத்து வேறுபாடுகள் இருந்தாலும்,அதிமுக கட்சியின் நலன்களுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் லட்சக்கணக்கான தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:  ‘பெண் அரசியல்வாதியாக வியக்க வைக்க தலைவர் ஜெயலலிதா. அவரது போராட்ட குணங்களை கண்டு வியக்கிறேன். அதிமுக தொண்டர்களிடம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

Leave a Reply