‘நாடா’வை அடுத்து சென்னை நோக்கி வருகிறது ‘வார்தா’ புயல்

‘நாடா’வை அடுத்து சென்னை நோக்கி வருகிறது ‘வார்தா’ புயல்

chennai rains8கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தை நோக்கி வந்து பயமுறுத்திய ‘நாடா’ புயல், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் வலுவிழந்து கரை கடந்தது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை வந்த போதிலும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம்ன் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயலுக்கு ‘வார்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் டிசம்பர் 11ஆம் தேதி, சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்றும் அந்த சமயத்தில் மணிக்கு 130கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையிலும்  டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தேவையான முன்னெச்சரிக்கையை அரசு மற்றும் பொதுமக்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது

Leave a Reply