உள்துறை அமைச்சருடன் தமிழக பொறுப்பு ஆளுனர் திடீர் சந்திப்பு
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரம், மற்றும் சட்ட ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து உள்துறை அமைச்சருடன் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் எழுந்து வருகின்றன. தமிழக அரசியல் நிலவரத்தை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும் நிலைமைக்கு ஏற்ப தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக கவர்னரை அடுத்து விரைவில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க டெல்ல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.