சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் ரகசிய ஆலோசனையா?
அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேற்று சசிகலாவை நேரில் சென்று வலியுறுத்தினார்.கள். ஆனால் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை ஒருபோதும் தங்கள் தலைவியாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று சமூக வலைத்தளங்களில் குவியும் பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
சசிகலாவை ஜெயலலிதா என்றுமே தோழியாகத்தான் வைத்திருந்தார் என்றும் அவர் அரசியலுக்கு வருவதை அவர் விரும்பவில்லை என்பதே உண்மை என்றும், சசிகலா தனது வரம்பை மீறி அதிமுக தலைமையை கைப்பற்ற நினைத்தால் அதிமுக படுகுழியில் தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிரான எம்.எல்.ஏக்க்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் ஆகியோர் ரகசிய ஆலோசனை செய்து வருவதாகவும், சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால் அதை முறியடிக்க தகுதியான வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிஅது.