போர்க்கால நடவடிக்கைகளில் மீட்புப்பணிகள். இன்று இரவுக்குள் மின் விநியோகம் சீர் செய்யப்படும்
வர்தா புயல் காரணமாக சென்னையின் பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்து மின் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
சேதம் அடைந்த மின் கம்பங்கள் சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்,.
நேற்று விடிய விடிய மின்வாரிய அதிகாரிகள் மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில் நேற்று மாலை முதல் தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்பட ஒருசில பகுதிகளில் மின் விநியோகம் சீரடைந்தது. இந்நிலையில் சென்னையின் மற்ற பகுதிகளிலும் இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகிவிடும் என்று மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.