ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த என்.ஜி.ஓ சார்ப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வருக்கு என்னென்ன நோய் இருந்தது, அதற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் இந்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது இன்று தெரியவரும். இந்த மனு விசாரணைக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.