சசிகலாதான் அடுத்த அதிமுக பொதுச்செயலாளர். பொன்னையன் உறுதி.

சசிகலாதான் அடுத்த அதிமுக பொதுச்செயலாளர். பொன்னையன் உறுதி.

அடுத்த பொதுச்செயலாளர் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் சசிகலா சின்னம்மாதான் அடுத்த பொதுச்செயலாளர் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

இன்று ஜெயலலிதா சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பொன்னையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, எம்ஜிஆர் அவர்களுடைய மனசாட்சி அம்மா என்றும் அம்மாவின் மனசாட்சி வாழ்ந்து வருபவர் அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலா என்றும் கூறிய அவர், அம்மாவுடன்  33 ஆண்டு காலம் சுக துக்கங்களில் பங்கேற்று இந்த இயக்கத்தை கட்டிக் காட்டி வந்த சின்னம்மாதான் அடுத்த அதிமுக பொதுச் செயலாளர் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது தங்களுடைய ஒரே நோக்கம் சின்னம்மாவை சம்மதிக்க வைப்பது தான் என்றும் பொன்னையன் மேலும் கூறினார்.

Leave a Reply