இந்திரா காந்தியை விட நான் தைரியசாலி. பிரதமர் மோடி

இந்திரா காந்தியை விட நான் தைரியசாலி. பிரதமர் மோடி


உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் பொதுமக்கள் பெரும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளதால் பாஜவுக்கும் பிரதமருக்கும் எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்காக பாஜக தற்போது இந்த விலையை தந்துள்ளதாகவும், இதேபோன்று ஒரு சூழ்நிலை கடந்த 1970ஆம் ஆண்டு ஏற்பட்ட போது இந்த துணிச்சலான காரியத்தை செய்ய அன்றைய பிரதமர் இந்திராகாந்தி முன்வரவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பணிகள் தொடர்பாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.,க்களுடன் டெல்லியில் உரையாடிய பிரதமர் மோடி கூறியதாவது: கடந்த 1970களில் இந்தியாவில் பெரும் பணவீக்கம் நிலவியது. அதனை எதிர்கொள்ளும் விதமாக, ரூபாய் சீர்திருத்தப் பணிகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொள்ளத் தவறிவிட்டார். அவருக்கிருந்த அச்சமே அதற்குக் காரணம். அதற்கான விலையை தற்போது பாஜக.,வினர் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை நாம் செயல்படுத்தி உள்ளோம். நான் உள்பட பாஜக பிரதிநிதிகள் அனைவருமே, இந்திரா காந்தியைவிட மிகவும் தைரியசாலிகள். இதனை படிப்படியாக, ஏழை எளிய மக்களும் விரைவில் உணருவார்கள்,’’ என்றும் பிரதமர் மோடி கூறியதாக, பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply