டெல்லி செல்கிறார் முதல்வர் ஓ.பி.எஸ். பிரதமருடன் சந்திப்பு
சமீபத்தில் ஏற்பட்ட வர்தா புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் நேரடியாக அளித்து உரிய நிவாரண தொகை பெறுவதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்ல்வுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் வீசிய வர்தா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வர்தா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தற்காலிகமாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் வர்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் தொகை ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.