பெண் போலீஸ் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.100 கோடி.. அதிர்ச்சி தகவல்
ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் கருப்புப்பணம் வைத்துள்ள பலர் அந்த பணத்தை பினாமி நபர்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெண் போலீஸ் ஒருவரது வங்கிக்கணக்கில் திடீரென ரூ.99.99 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் போலீஸ் ரேகா ராணி ரஜோரியா என்பவர் சமீபத்தில் தனது வங்கி கணக்கை சரிபார்த்துள்ளார். அப்போது அவரது கணக்கில் ரூ.99.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டதைப் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் வங்கி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறியதோடு பிரதமர் மோடிக்கும் இதுகுறித்து கடிதம் எழுதி விசாரணை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.