இன்று பிரதமர் மோடியுடன் முதல் ஓபிஎஸ் சந்திப்பு. 3 முக்கிய கோரிக்கைகளை வைக்கிறார்

இன்று பிரதமர் மோடியுடன் முதல் ஓபிஎஸ் சந்திப்பு. 3 முக்கிய கோரிக்கைகளை வைக்கிறார்

பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று சந்திக்கின்றார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் முதல்வர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அதன்பின்னர் முதல்முறையாக பிரதமரை சந்திக்கின்றார்.

இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் முதல்வர் மூன்று முக்கிய கோரிக்கைகளை வைக்கவுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்ன.  வார்தா புயல் நிவாரண நிதி, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை, நாடாளுமன்ற வளாகத்தில் ஜெ.சிலை வைக்க கோரிக்கை என்ற மூன்று கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மோடியிடம் வைக்கவுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது:  ”தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை அன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து, தமிழகத்தில் ‘வார்தா’ புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும் மற்றும் தமிழகம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளிக்க உள்ளார்.

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டியும், ஜெயலலிதாவின் முழு திருவுருவ வெங்கலச் சிலையினை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கடிதங்களை அளிக்க உள்ளார்” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply