மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?


செட்டிநாடு சமையலில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. இந்த மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள் :

மட்டன் எலும்பு கறி – அரைக்கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன்
ப. மிளகாய் – 3
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகு, சீரகம், கசகசா அரைத்தது – 2 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
எண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
பட்டை – 1 அங்குலம் அளவு
கிராம்பு – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை  :

* சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டன் எலும்பு கறியை நன்றாக கழுவி வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதக்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக மசிந்தவுடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும்.

* அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமாக வைக்கவும்.

* பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது, மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

* பின்னர் இத்துடன் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி வைத்து 5 விசில் வரை விடவும். அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேகும்.

* விசில் இறங்கியவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு ரெடி.

 

Leave a Reply