தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்
தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் நேற்று நடைபெற்ற வருமான வரித்துறையல் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதால் தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக நிர்வாக சீர்திருத்த ஆணையர் பதவி வகித்து வரும் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைசெயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு ஐஏஎஸ் படிப்பை முடித்த கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசில் பல்வேறு துறைகளிலும் பொறுப்பு வகித்து வந்தார். இவர் தலைமைச்செயலாளராகவும், நிர்வாக சீர்திருத்த ஆணையராகவும் தொடர்வார் என தெரிகிறது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ராமமோகனராவ் இலாகா இல்லாத அதிகாரியாக தற்போது உள்ளார்.