சேலத்தை அடுத்து கடலூர் கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறை ரெய்டு
நேற்று சேலம் கூட்டுறவு வங்கிகளில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் பலகோடி ரூபாய் பணபரிவர்த்தனை நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கடலூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித் துறையினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் துணையுடன் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு பின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் கூட்டுறவுவ் வங்கிகளில் நவம்பர் 10ம் தேதிக்கு பின் நடந்த பணப் பரிவர்த்தனை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. கூட்டுறவு வங்கியில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு ஹவாலா பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது