பிளாஸ்டிக்கினால் உயிரிழந்த 29 திமிங்கலங்கள். ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்
உலகம் முழுவதும் பிளாஸ்டிக்கின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பிளாஸ்டிக்கினால் சுற்றுச்சூழல் கெடுவதால் இதன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் சுற்றுச்சூழல் மட்டுமின்றி அவற்றை தெரியாமல் சாப்பிடும் விலங்கினங்களும் பலியாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஜெர்மனியின் கடற்கரை ஒன்றில் 29 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின.
இறந்த திமிங்கலங்களை சோதனை செய்து பார்த்ததில் அவற்றின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகவும், இதனால்தான் அவரை பலியாகியுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினால் மனிதர்களுக்கு மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களும் பலியாகி வருவது வேதனைக்குரியதாக உள்ளது.