ஜெயலலிதாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை எங்களால் மட்டுமே நிரப்ப முடியும். தமிழிசை செளந்திரராஜன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப சரியான நபர் அதிமுகவில் இல்லை என்ற கருத்தே பரவலாக இருந்து வருகிறது. இருப்பினும் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் தற்போது வரை திறமையாக நடத்தி வருவதால் விரைவில் இவர் ஜெயலலிதாவின் இழப்பை ஈடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜெயலலிதாவின் இன்னொரு பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா அமர்த்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘தமிழ்நாட்டில் ஜெயலலிதா போன்ற மிகப்பெரும் அரசியல் கட்சித்தலைவரின் மறைவிற்குப் பின் மாபெரும் வெற்றிடம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை பா.ஜ.க.வால் மட்டுமே நிரப்ப முடியும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அதிமுகவை உடைக்க பாஜக மேலிடமும் மத்திய அரசும் முயற்சி செய்து வரும் நிலையில் தமிழிசையின் இந்த பேட்டி அதை உறுதிப்படுத்துவது போல் உள்ளதாக டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.