நான் உங்கள் ரசிகன் என்று கூறுவதை விஜய் விரும்ப மாட்டார். சாந்தனு பாக்யராஜ்

நான் உங்கள் ரசிகன் என்று கூறுவதை விஜய் விரும்ப மாட்டார். சாந்தனு பாக்யராஜ்

கோலிவுட் திரையுலக பிரபலங்களுடன் இளையதளபதி விஜய் நட்புடன் இருப்பார் என்றும் அனைவரையும் அரவணைத்து செல்வார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் சாந்தனு பாக்யராஜ் விஜய்யுடனான தனது உறவு குறித்து கூறுகையில் ‘நான் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்தபோதிலும் அவரிடம் ரசிகர் போன்று நடந்து கொள்வதில்லை. விஜய்யும் நானும் சகோதரர்களாகத்தான் பழகி வருகிறோம். ரசிகர் என்று கூறுவதைவிட இதைத்தான் அவரும் விரும்புவார். திருமணத்திற்கு பின்னர் முதன்முதலில் நான் விஜய் வீட்டுக்கு விருந்துக்கு சென்றபோது இதை நான் புரிந்து கொண்டேன் என்று கூறினார்.

மேலும் விஜய் ஆரம்பகட்டத்தில் சந்தித்த சோதனை போன்றே தற்போது நானும் சந்தித்து வருகிறேன். விஜய் எப்படி அந்த சோதனைகளில் இருந்து மீண்டும் வந்தாரோ அதேபோல் நானும் விரைவில் மீண்டும் வருவேன்’ என்று சாந்தனு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply