‘பைரவா’ டிரைலர் ரிலீஸ் தேதி

‘பைரவா’ டிரைலர் ரிலீஸ் தேதி

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசரை கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘பைரவா’ டிரைலர் குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வரும் என்று இயக்குனர் பரதன் தன்னுடைய டுவிட்டரில் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது வரும் புத்தாண்டு தினத்தில் அதிகாலை 12 மணிக்கு ‘பைரவா’ டிரைலர் வெளிவரும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும்

2017ஆம் ஆண்டின் முதல் நொடியை இளையதளபதியின் ரசிகர்கள் ‘பைரவா’ டீசரின் வரவேற்பதன் மூலம் புத்தாண்டை குதூகுலமாக கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘பைரவா’ படத்தின் டிரைலர் முதல் பார்வை என்பது குறித்த நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply