பிளாஸ்டிக் இல்லா மதுரை
இன்று முதல் மதுரை மாநகராட்சி பகுதிக்குள் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாடு குறைக்கும் உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. பாலித்தீன், பிளாஸ்டிக் பைகளை கடைகளிலும், பொதுமக்களும் பயன்படுத்தினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதற்கான விழிப்புணர்வு, எச்சரிக்கை மற்றும் விளம்பரங்களை கடந்த இரண்டு மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் செய்து வந்தது. அதிலும் முக்கியமாக மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும் பிளாஸ்டிக், பாலித்தின் ஒழிப்பு கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக மதுரை மாற துணிப்பைகளையும், பாத்திரங்களையும் எடுத்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைத்து வருகிறார்கள் பொதுமக்கள்.