இந்தியாவில் இப்படி ஒரு துறையா? ம.பி அரசின் புதிய முயற்சி
இந்தியாவில் முதல் முறையாக ‛மகிழ்ச்சிக்கு என்று ஒரு துறை’யை மத்திய பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த துறையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியபோது, \உதவிகள் தேவைப்படுவோருக்கு பயன் கிடைக்குமாறு ‛மகிழ்ச்சி துறை’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் மகிழ்ச்சியும் உறுதி செய்யப்படும். மாநிலம் முழுவதும் இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற இதுவரை 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்’ என்று கூறினார்
ஏழ்மையில் வாடும் மக்களுக்கு தேவையான உதவிகள், தகுதியான நபர்களுக்கு சென்று சேர்க்க இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த துறை எதிர்பார்த்த வெற்றியை பெற்றால் படிப்படியாக பாஜக ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பாஜக தலைமை கூறியுள்ளது.