மோடியின் அடுத்த அதிரடி. தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான ரூ.15,000 கோடிகள் சொத்துக்கள் முடக்கம்
கடந்த நவம்பர் மாதம் கருப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு சிரமம் இருந்தாலும் பெரும்பாலான கருப்புப்பணம் முடங்கியது. மேலும் கள்ள நோட்டுக்களும் தீவிரவாத செயல்களும் முற்றிலும் நீங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி இன்று தொடங்கியது. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு, இந்தியாவின் தேடப்படும் மிகப்பெரிய கிரிமினல் என்று கூறப்படும் தாவூத் இப்ராஹிமின் 15,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு நாட்டில் தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் பிரதமர் மோடியின் நடவடிக்கையால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான சொத்துப்பட்டியலை அந்நாட்டிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதின் பேரில்தான் ஐக்கிய அரபு நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.