பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு. பொதுமக்கள் அதிருப்தி
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து கொண்டு வரும் நிலையில் கடந்த 1ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 12 மணி முதல் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றபட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.03ம் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் இறங்கும்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள் ஏறும்போது மட்டும் சரியான அளவில் உயர்த்துவது பொதுமக்களை அதிருப்தி பெற செய்துள்ளது.