இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத்கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7விக்கெட்டுக்களை இழந்து 350 ரன்கள் எடுத்தது. ராய் 73 ரன்களும், ரூட் 78 ரன்களும், ஸ்டோக்ஸ் 62 ரன்களும் அடித்தனர்.
351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய 63 ரன்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தபோதிலும் கேப்டன் விராத்கோஹ்லி மற்றும் ஜாதவ் ஆகியோர் அபாரமாக ஆடி இருவரும் சதமடித்தனர். விராத் கோஹ்லி 122 ரன்களும், ஜாதவ் 120 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 356 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராத்கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்றவுடன் சந்தித்த முதல் போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி சதமடித்தும் சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.