பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்கள். தமிழ் இளைஞர்களுக்கு விஜய் கூறிய செய்தி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட அனைத்து தமிழ் நடிகர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது இளையதளபதி விஜய் தனது டுவிட்டரில் வீடியோ வடிவில் ஒரு செய்தியை கூறியுள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது:
உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்குவது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தானே தவிர பறிப்பதற்கு அல்ல.
தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் கட்சி பேதமின்றி தமிழன் என்ற ஒரே உணர்வுடன் இந்த போராட்டத்தில் குதித்துள்ள அத்தனை நெஞ்சங்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இவ்வளவுக்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்’
இவ்வாறு விஜய் தனது வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.