மாணவர்கள் போராட்டத்தின் சக்தி. டெல்லி கிளம்பினார் ஓபிஎஸ். இன்று அவசர சட்டம் இயற்றப்படுமா?

மாணவர்கள் போராட்டத்தின் சக்தி. டெல்லி கிளம்பினார் ஓபிஎஸ். இன்று அவசர சட்டம் இயற்றப்படுமா?

சென்னை மெரினாவில் வெறும் 500 பேர்களுடன் நேற்று முன் தினம் ஆரம்பித்த போராட்டம் இன்று லட்சக்கணக்கில் கூடியதோடு, இந்த போராட்டத்தின் குரல் டெல்லி செங்கோட்டை வரை கேட்கும் அளவுக்கு சக்திமயமாகியுள்ளது.

மாணவர்களின் உறுதியான போராட்டத்தின் விளைவாக முதல்வர் ஓபிஎஸ் நேற்றிரவு பிரதமரை சந்திக்க டெல்லி கிளம்பினார். தமிழர்களின் உணர்வுகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே அவர்கள் தலைமையில் இன்று மதியம் 1 மணிக்கு அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

Leave a Reply