தமிழர்கள் அழைத்தால் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தயார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, அவ்வப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வருகிறார். அவசரச் சட்டம் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒரே தீர்வு என்று உறுதியாக கூறியதால்தான் போராடி வரும் இளைஞர்கள் அதை நோக்கி தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு முறைப்படி ஜல்லிக்கட்டு நடக்கும்போது அதை நேரில் கண்டுகளிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்புகள் ஏதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பை கண்டிப்பாக ஏற்று ஜல்லிக்கட்டை பார்க்க வருவேன்’ என்று அவர் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்
மேலும் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிவதாகவும், கூடிய விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதன் காரணமாக, அவர்களின் போராட்டம் வெற்றியடையும் என்று தனக்கு நம்பிக்கையுள்ளதாகவும், முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது பேட்டியில் கூறியுள்ளார்.