ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுமா? மதுரையில் முதல்வர் ஆலோசனை

ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுமா? மதுரையில் முதல்வர் ஆலோசனை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் தங்கி உள்ளார். இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களுடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை செய்து வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிகிறது. இல்லையேல் முதல்வர் அலங்காநல்லூர் பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்தான் என்று கூறப்படினும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிகட்டு நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply