14 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் உலகின் 13-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நேற்று நடந்த காலிறுதியில் அவர் ரஷ்யாவின் அனஸ்டசியாவை 6-4, 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார்.
காலிறுதியில் வெற்றி பெற்ற வீனஸ் வில்லியம்ஸ், புதுமுக வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வான்ட்வெக் அவர்களுடன் அரையிறுதியில் மோதவுள்ளார். இந்த போட்டியில் வீனஸ் வெற்றி பெற்றல் பட்டம் வெல்லும் வாய்ப்பு மிக அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.