கமல்-சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டர் போர். பெரும் பரபரப்பு
ஜல்லிக்கட்டு பிரச்சனை தீர்ந்து இரண்டு நாட்களாகிவிட்டாலும், இதுகுறித்த கருத்து மோதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. குறிப்பாக நடிகர் கமல்ஹாசனை பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முட்டாள்தனமான கருத்தை கூறுபவர் என்று கூறியதும் அதற்கு கமல் பதிலடி கொடுப்பதும் என டுவிட்டர் போர்க்களமாக காட்சி அளிக்கின்றது.
நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முதல்வர் போராட்டக்காரர்களை சந்தித்திருக்க வேண்டும் என்று கமல் கூற, இதுவொரு முட்டாள்தனமான கருத்து என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கமல், ”நான் என்றும் தமிழன். மகாத்மா காந்தியே மக்களை நேரில் சந்தித்தவர். சீசர் கூட மக்களுக்கு முன்பு தன்னடக்கத்துடன் தான் இருந்தார். ஏன் முதல்வர் மக்களை சந்தித்திருக்க கூடாது’ என்று பதிலளித்து உள்ளார். மேலும் இனிமேல் சு.சாமிக்கு பதில் சொல்லப்போவதில்லை என்றும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.