68வது குடியரசு தினம்: உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் ஜொலித்த மூவர்ண கொடி
68வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மேலும் இந்திய குடியரசு தினம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் உள்ள இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் துபாயில் 823 மீட்டர் உயரத்தில் நிற்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, இந்தியாவுக்கு மரியாதை செய்யும் விதமாக தேசியக் கொடியின் நிறத்தில் ஒளியூட்டப்பட்டது.
புர்ஜ் கலிபா கட்டட நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின் உள்பட பல இந்திய பிரபலங்கள் வரவேற்றுள்ளனர். புர்ஜ் கலிபா கட்டடம் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளியூட்டப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.