பீட்டா எதிர்ப்பு எதிரொலி. கோவை நடக்கவிருந்த சித்ரா நிகழ்ச்சி ரத்து

பீட்டா எதிர்ப்பு எதிரொலி. கோவை நடக்கவிருந்த சித்ரா நிகழ்ச்சி ரத்து

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சென்னை மெரீனா உள்பட நடைபெற்ற இளைஞர்களின் எழுச்சி போராட்டம் வெற்றி பெற்றாலும் பீட்டா உள்பட இந்த தடைக்கு காரணமாக விலங்குகள் நல அமைப்புகள் மீது தமிழக மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் கோவையில் ஹியூமன் அனிமல் சொசைட்டி நடத்த திட்டமிட்டிருந்த பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

பீட்டா போன்றே தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அமைப்புகளில் ஒன்று ஹியூமன் அனிமல் சொசைட்டி (HAS). இந்த அமைப்பு கோயம்புத்தூரில் பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜல்லிக்கட்டுக்காக நடந்த புரட்சியை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் தைரியமாக நடத்த ஏற்பாடுகளை இந்த அமைப்பு செய்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு டிக்கெட்டுக்களுக்கும் பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு அந்த பணத்தின் மூலம் தமிழர்கள்  பண்பாட்டை அழிக்க இந்த அமைப்பு சதி செய்து வருகிறது.  

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், இந்த நிகழ்ச்சிக்கு போலீசில் அனுமதி தரக்கூடாது எனவும் மனு கொடுக்கப்பட்டது. இதனால் அலறிய பீட்டா பங்காளி பாடகி சித்ராவின் நிகழ்ச்சியை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி ரத்து ஆனால் இந்த அமைப்புக்கு மிகப்பெரிய பண நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிஅது.

Leave a Reply