கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி. பும்ரா அபாரம்

கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி. பும்ரா அபாரம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது

நேற்று நாக்பூரில் நடைபெற்ற 2வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய வைத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் 71 ரன்களும், விராத் கோஹ்லி 21 ரன்களும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற 8 ரன்களே தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை பும்ரா வீசினார்.

இந்த ஓவரில் முதல் பந்தில் விக்கெட்டும், இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் கொடுத்த பும்ரா, 3வது பந்தை மெய்டனாகவும், நான்காவது பந்தில் மீண்டும் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். ஐந்தாவது பந்தில் ஒரு ரன் கொடுக்க கடைசி பந்தில் இங்கிலாந்து வெற்றி பெற ஆறு ரன்கள் தேவையிருந்தது. ஆனால் பும்ராவின் அபாரமான அந்த பந்தில் இங்கிலாந்து அணி ஒரு ரன் கூட எடுக்காததால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply