தேர்தல் மாநிலங்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு. ரிசர்வ் வங்கி அதிரடி
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் செலவுக்காக வங்கியில் இருந்து பணம் எடுக்கும் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில், வேட்பாளர்கள் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்த அனுமதிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ்வங்கிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதம் ஒன்றில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயக உயர்த்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டது.
ஆனால் இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, தற்போதைய சூழலில் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மறுத்துவிட்டது. இதனால் அரசியல் கட்சிகள் அதிருப்தி அடைந்துளன.