கூடங்குளம் அணு உலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் 6 பணியாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூடங்குளம் அணு உலையில் வெப்ப நீர் செல்லும் குழாய் ஒன்றுஇன்று காலை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் அணு உலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 6 பணியார்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களில் 3 பேர் அணு உலையின் நிரந்தர பணியாளர்கள் ஆவர். மற்ற 3 பேரும் தற்காலிக ஊழியர்கள்.
காயமடைந்த 6 பணியாளர்களும் உடனடியாக அணு உலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் அவர்களை நாகர்கோவில் ஆசாரிப்பாள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அணு உலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இன்னும் முடிவடையாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் கூடங்குளம் பகுதியில் பெரும் பதட்டம்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1nQ6DQJ” standard=”http://www.youtube.com/v/CEXN8VIVj8s?fs=1″ vars=”ytid=CEXN8VIVj8s&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1194″ /]