அஜீத் வீட்டில் வெடிகுண்டு புரளி. விஜய் ரசிகர்களுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்

thala bombநேற்று காலை அஜீத் வீட்டில் மர்ம தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள விவகாரம் சமுக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜீத் ரசிகர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘தல மீது கை வைத்தால் தலை இருக்காது என்றும், எங்களை தாண்டிதான் எங்கள் தல’யை தொட முடியும் என்றும் ஆவேசமாக கருத்து கூறிவரும் அவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை உடனே போலீஸார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எங்கள் தல சாவுக்கு பயந்தவர் இல்லை என்றும், தைரியம் இருந்தால் தல’யை நேரில் வந்து மிரட்டி பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளதால் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஜீத் வீட்டில் வெடிகுண்டு இல்லை என்றும், அந்த மர்ம தொலைபேசி வெறும் மிரட்டல்தான் என்றும் அஜீத் வீட்டை நேற்று சோதனையிட்ட வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினர்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஜய் ரசிகர்களுக்கும் இந்த மிரட்டலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இது யாரோ வேண்டுமென்றே பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே புரளி கிளப்பிவிட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.

Leave a Reply