விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே பாலம். மத்திய அரசு திட்டம்

விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே பாலம். மத்திய அரசு திட்டம்

21கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்த இடங்கள். ஆனால் இந்த இடங்களை சிலசமயம் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் போகும் நிலை ஏற்ப்ட்டு வருகிறது.

இதை தவிர்ப்பதற்காக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலாபயணிகள் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ்சர்மாவை கன்னியாகுமரிக்கு சமீபத்தில் வரவழைத்து குமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களின் மேம்பாட்டுக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ்சர்மாவிடம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அந்த அடிப்படையில் மத்திய அரசின் சுற்றுலாத்துறை செயல்படுத்தி வரும் கடற்கரை சுற்றுலாபகுதிகளை மேம்படுத்தும் திட்டமான “சுவதேஷ் தர்‌ஷன்” என்ற திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக மத்திய அரசு இந்த சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவதற்காக “சுவதேஷ் தர்‌ஷன்” திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ. 100 கோடியை ஒதுக்குவதற்கான ஒப்புதலை மத்திய சுற்றுலா துறை வழங்கி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த நடை பாலம் ரூ. 15 கோடி செலவில் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாலம் 95 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இந்த நடைபாலத் துக்காக 8 ராட்சத தூண்கள் கடலுக்குள் அமைத்து இந்த பாலம் அமைக்கப்படுகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இந்த பாலம் அமைக்கப்படுவதன் மூலம் எந்த நேரத்திலும் தடங்கலின்றி திருவள்ளுவர் சிலையை சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

Leave a Reply