10, 12 வகுப்புகளுக்கு நேரடி தேர்வா? ஆன்லைன் தேர்வா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன?

இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டு என்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்த தேர்வு நேரடி தேர்வா? ஆன்லைன் தேர்வா? என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத் தேர்தல் நடைபெறவில்லை

இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

இந்த நிலையில் பொது தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்தே தேர்வுகள் அமையும்.