தமிழக ஆளுனர் ரோசய்யாவுக்கு எதிரான வழக்கில் புதிய உத்தரவு

தமிழக ஆளுனர் ரோசய்யாவுக்கு எதிரான வழக்கில் புதிய உத்தரவு
rosaiah
தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவுக்கு எதிரான ஐதராபாத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்று நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தெலுங்கானா மாநிலம் பிரிவதற்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆந்திர அரசின் முதல்வராக இருந்த தற்போதைய தமிழக கவர்னர் ரோசையா, தனியார் சிலருக்கு சட்ட விரோதமாக ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் வர்த்தக மதிப்பு மிக்க இடத்தில் இருந்த 9 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து ஊழல் ஒழிப்பு ஆணைய நீதிமன்றத்தில் ரோசய்யாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக நீதிமன்றம் ரோசய்யாவுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு ஐதராபாத் ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரோசய்யா சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில், தனியார் சிலருக்கு நில ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வராக இருந்த ரோசய்யா, அரசு நிர்வாகத்தை வலியுறுத்தியதாக சாட்சிகள் எதுவும் இல்லை. எனவே, அவருக்கு எதிரான வழக்கையும், அழைப்பாணையையும் தள்ளுபடி செய்வதாக ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.

Leave a Reply