இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மீது மானநஷ்ட வழக்கு தொடரந்த ஜிகர்தண்டா தயாரிப்பாளர்.

jigarthandanபீட்சா என்ற ஒரே படம் மூலம் தமிழ்த்திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனது இரண்டாவது படமான ஜிகர்தண்டா’ படத்தையும் வெற்றிப்படமாக்கினார். இரண்டு படங்கள் தந்த புகழினால் ரஜினி படத்தையே இயக்கும் அளவுக்கு பேசப்பட்ட கார்த்திக் சுப்புராஜுக்கு தற்பொது திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜிகர்தண்டா படத்தின் இந்தி உரிமையை எனக்குத் தெரியாமல் தயாரிப்பாளர் விற்கிறார் என்றும் அதற்குத் தடைவிதிக்கவேண்டும் என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவும் பெற்றார்.

இந்தத் தடை உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர்கள் தரப்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்தத்தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கிவிட்டதாகவும் அதைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் மீது ஐந்து கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பைவ்ஸ்டார் நிறுவனத்தைச் சேர்ந்த கதிரேசன், ஏற்கெனவே படப்பிடிப்பின்போது கார்த்திக் சுப்புராஜ் செய்த தாமதம் காரணமாக சுமார் ஒன்றரை கோடி நஷ்டம் எற்பட்டுவிட்டது.

அதைத் தொடர்ந்து எங்கள் நிறுவனத்துக்கெதிராக அவர் பேசிக்கொண்டிருந்ததால் தெலுங்கு உரிமையையும் விற்கமுடியாமல் அதில் சுமார் நான்கு கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இவற்றிற்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அவர் மீது ஐந்துகோடி கேட்டு மானநஷ்டவழக்குத் தொடர இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply