மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் நேற்று சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், “காவலர் கனகராஜ் பலியான சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவதூறாக அறிக்கை வெளியிட்டதாகவும் அவரது அவதூறாக அறிக்கை முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.