படம் தயாரிக்க கொடுத்த பணத்தில் பங்களா வாங்கினாரா கவுதம் மேனன்?

gowthamபிரபல இயக்குனர் கவுதம் மேனன் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற பல ஹிட் படங்களை இயக்கியவர். இந்நிலையில் இவர் மீது ரூ.10 கோடி மோசடி வழக்கு சென்னை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் சமீபத்தி இயக்கிய ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான “நீதானே என்பொன்வசந்தம்” படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.எஸ்.இன்போடெக் நிறுவனத்தின் இயக்குநர் எல்ரெட் குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கவுதம் மேனன் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நீதானே என் பொன்வசந்தம்’ என்ற  படத்தை தயாரித்தேன். அதற்காக எங்கள் நிறுவனத்திலிருந்து கெளதமின் போட்டான் கதாஸ் நிறுவனத்திற்கு 13கோடியே 27 லட்சத்தை கொடுத்தது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இளையராஜாவை இசையமைப்பாளராகவும், முழு படத்தையும் இந்தியாவிலேயே எடுத்தும் முடித்துவிட்டார் கெளதம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் படத்தையும் முடிக்கவில்லை.படமும் வெளியாகி தோல்வியடைந்தது.

நாங்கள் கொடுத்த பணத்தில் அடையாறில் வீடு ஒன்றை வாங்கிவிட்டார். பட செலவிற்கு 4 கோடி மட்டுமே செலவு ஆகியிருக்கிறது. மீதமுள்ள 8 கோடிக்கு வட்டியுடன் சேர்த்து 10 கோடியே 67 லட்சத்து 11,225 ரூபாய் கவுதம் மேனன் எங்களுக்கு தரவேண்டும். அதுவரை அவர் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் “தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்” படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, “ கெளதம் வாசுதேவ் 4 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வமான பதிலை தரவேண்டும். அதன் பிறகு வழக்கை விரைவில் விசாரித்து முடிக்கும் பட்டியலில் சேர்க்கப்படும்

Leave a Reply