பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது, “பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு தற்போது கேரள காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய யேசுதாஸ், “பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைந்தே இருக்க வேண்டும். இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது” என்று தெரிவித்திருந்தார்.
யேசுதாஸின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு மகளிர் அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மகிளா காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கே.ஜே.யேசுதாஸுக்கு எதிராக கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளன