கனிமொழி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தெலுங்கானா மாநிலம் அதிரடி

கனிமொழி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தெலுங்கானா மாநிலம் அதிரடி

திமுக தலைவர் கருணாநிதி மகளும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி மீது 3 பிரிவுகளில் தெலுங்கானா மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற உலக நாத்திக மாநாட்டில் கனிமொழி எம்பி பேசியபோதும், ‘கோயிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல் அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியலை பாதுகாப்பாரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்?. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா?” என்று கூறியிருந்தார்

கனிமொழியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மீது ஐதராபாத்தில் உள்ள சயீதாபாத் நகர் காவல் நிலையத்தில் கருணா சாகர் என்ற வழக்கறிஞர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தெலங்கானா மாவட்ட நீதிமன்றத்தில் கரீம்நகர் பாஜக மாவட்ட தலைவர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணையில் கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்ய செய்ய தெலங்கானா கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி கோயில் குறித்த விமர்சனம் செய்த்தாக கரீம் நகர் நீதிமன்றம் கனிமொழி மீது 153a, 504, 505, 298, 295 A ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கரிம் நகர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply