நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் மிளகுபொடி தூவி அமளியில் ஈடுபட்ட ஆந்திர எம்.பிக்கள் மீது பீகார் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக வரலாற்றில் நாடாளுமன்றம் இதுபோன்ற ஒரு வன்முறையை பார்த்ததில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களே கிரிமினல்கள் போல மிளகுப்பொடி தெளிப்பதும், கத்தியை காட்டி மிரட்டுவதும் இந்திய ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று பீகார் நீதிமன்றத்தில் சுதிர்குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 504, 323, 124பி, 308, 120பி படி ஆந்திர எம்.பிக்கள் 21 பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி , வழக்கை அடுத்தமாதம் 7ஆம் தேதி உத்தரவிட்டார்.
எம்.பிக்கள் மீதே கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.