வைரமுத்துவை விமர்சித்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

வைரமுத்துவை விமர்சித்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

கவியரசு வைரமுத்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வரும் நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று பாரதிராஜா மற்றும் சீமான் ஆகியோர் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவித்தனர்

இந்த நிலையில் நேற்று முன் தினம் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை அவமதித்து பேசுபவர்கள் கொல்லப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சரும் பாஜக துணை தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்

இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன் , அய்யா வைகுண்டர் வழிபாடு சிவசந்திரன், பாஜக மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட ஆறு பேர் மீது பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply